எல்.எல்.பி., சட்ட படிப்பு கட் ஆப் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

எல்.எல்.பி., சட்ட படிப்பு கட் ஆப் வெளியீடு

எல்.எல்.பி., சட்ட படிப்பு கட் ஆப் வெளியீடு 
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு, எல்.எல்.பி., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை, முடியும் நிலையில் உள்ளது. இதில், பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, செப்., 3ல், கவுன்சிலிங் துவங்கியது. இதற்கான, தர வரிசை பட்டியல், எப்போதும் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையின்போது, &'ஹானர்ஸ்&' படிப்புக்கும், ஐந்தாண்டு, எல்.எல்.பி., படிப்புக்கும் மட்டும், தரவரிசை பட்டியலுடன், கவுன்சிலிங் தேதி விபரங்கள், தனியாக அறிவிக்கப்பட்டன.மூன்றாண்டு படிப்புக்கு, மாணவர்கள்தங்கள் பதிவு எண்களை உள்ளீடு செய்து, தங்கள் நிலையை தெரிந்து கொள்ளும் வசதிமட்டும் ஏற்படுத்தப்பட்டது. 


அதனால், கவுன்சிலிங்குக்கு எந்த, &'கட் ஆப்&' உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என தெரியாமல், மாணவர்கள் குழம்பினர். இதுகுறித்து, இரு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.இதையடுத்து, பல்கலையின் இணையதளத்தில் தரவரிசை பட்டியல் மட்டும், தனியாக வெளியிடப்பட்டது. 
இதை தொடர்ந்து, சட்ட பல்கலையின், tndalu.ac.in என்ற, இணையதளத்தில் மாணவர்களின், &'கட் ஆப்&' மதிப்பெண்ணுடன் கூடிய, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலையின் பதிவாளர், சங்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment