பள்ளி நேரம் முடியும் முன்பாக பூட்டு: கே.புதுக்கோட்டை அரசுப் பள்ளிக்கு நோட்டீஸ் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

பள்ளி நேரம் முடியும் முன்பாக பூட்டு: கே.புதுக்கோட்டை அரசுப் பள்ளிக்கு நோட்டீஸ்

பள்ளி நேரம் முடியும் முன்பாக பூட்டு: கே.புதுக்கோட்டை அரசுப் பள்ளிக்கு நோட்டீஸ் 


பள்ளி நேரம் முடியும் முன்பாக, பள்ளியை பூட்டிச் சென்ற கே.புதுக்கோட்டை அரசுப் பள்ளி தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குறிப்பாணை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே. மணிவண்ணன், ரெட்டியார்சத்திரம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் ஆய்வு செய்வதற்காக திங்கள்கிழமை சென்றுள்ளார். கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாலை 4.40 மணிக்கு அவர் சென்றபோது, பள்ளியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதன்மைக் கல்வி அலுவலர், அங்கிருந்து நேரடியாக திண்டுக்கல்லில் உள்ள தனது அலுவலகத்திற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களின் பள்ளியின் அலுவலக நேரமான மாலை 5 மணிக்கு முன்னதாக பூட்டிச் சென்றது குறித்து விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி அலுவலக நேரத்திற்கு முன்பாக, தலைமையாசிரியர், இளநிலை உதவியாளர் உள்ளிட்டோர் வெளியேறிச் சென்றது குறித்து 3 நாள்களுக்கு விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment