சிபிஎஸ்சி ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறை - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 18, 2019

சிபிஎஸ்சி ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறை

சிபிஎஸ்சி ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறை புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை திங்கள்கிழை நடைபெற்றது. தமிழ்நாடு, காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 42 ஆசிரியர்களும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 33 ஆசிரியர்களும் இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றனர். சிபிஎஸ்சி சிறப்புப் பயிற்சியாளர், ராசி வித்யாஸ்ரமம் பள்ளியின் முதுநிலை முதல்வர் நா.சு. தினேஷ் கலந்து கொண்டு, இன்றைய காலகட்டத்தில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு பாடங்களை நடத்துவது, 


மாணவர்களின் தனித் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது, உண்மை, நேர்மை, எளிமை, கீழ்படிதல் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பித்து, அவற்றை பாடத்தோடு இணைத்து, சமூகத்தில் தலைசிறந்த மாணவனாக உருவாக்கும் பொறுப்பு ஆகியவற்றை விளக்கிப் பேசினார். பள்ளியின் முதல்வர் ஜலஜா குமாரி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Please Comment