நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 18, 2019

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் 


மத்திய மற்றும் மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகள் பெற்ற ஆசிரியர்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாராட்டினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கரூர் அடுத்த க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணன், மற்றும் மாநில அரசு நல்லாசிரியர் விருதுகள் பெற்ற குளித்தலை அடுத்த பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி, கள்ளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, மணவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன், கொங்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் உள்ளிட்ட 10 நபர்களை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்களால் பாராட்டு பெற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment