உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் கல்லூரி ஊழியர்கள் அனுபவ சான்றிதழ் பெற வேண்டும் : கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Sunday, September 1, 2019

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் கல்லூரி ஊழியர்கள் அனுபவ சான்றிதழ் பெற வேண்டும் : கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் கல்லூரி ஊழியர்கள் அனுபவ சான்றிதழ் பெற வேண்டும் : கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு 


உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் கல்லூரி ஊழியர்கள் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனரிடம் அனுபவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் கல்லூரி முதல்வர்கள், அரசுக்கல்லூரி செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அரசுக்கல்லூரிகளில் 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பணியில் இருப்பவர்கள் தங்களின் பணி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு கல்லூரிகள்/ அரசு உதவி பெறும் கல்லூரிகள்/ தனியார் கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் தங்கள் பணியாற்றும் மண்டலத்தின் கல்லூரிக்கல்வி இணை இயக்குனரிடம் பணி அனுபவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனரிடம் சான்றிதழ் பெறாமல் போலி சான்றிதழ் சமர்பிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். பணி அனுபவ சான்றிதழுடன் தங்கள் கல்லூரியின் வருகை பதிவேட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் நகல் எடுத்து இணைக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், செயலாளர் இதுதொடர்பாக தேர்வர்களுக்கு தனித்தனியே சான்றிதழ் பெற்று வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
தேர்வர்களும், தங்களின் கல்லூரிகளிடமிருந்து குறிப்பிட்ட சான்றிதழை உடனடியாக பெற வேண்டும். இவ்வாறு கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment