ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Sunday, September 1, 2019

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 


என்ஆர்எச்எம் திட்டத்தின்படி தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டும் மருந்தகங்களில் காலியாக உள்ள 405 மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் போன்ற தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 405 பணி: மருந்தாளுநர் அல்லது மருந்து வழங்குபவர் (Dispenser) வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 57 வயது பூர்த்தியடையாதவராக இருக்க வேண்டும். தகுதி: சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற ஏதாவதொரு பிரிவில் மருந்தாளுநர் அதாவது டிப்ளமோ இன் பார்மஸி முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் டிப்ளமோ இன் பார்மஸி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளம்: நாளொன்றுக்கு ரூ.750 வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் பணியாற்ற வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் வேலை வழங்கப்படும். 
விண்ணப்பிக்கும் முறை: தமிழக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnhealth.org -இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்கநர், 
அறிஞர் அண்ணை அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், 
அரும்பாக்கம், சென்னை - 600 016 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnhealth.org/nptification.php அல்லது http://www.tnhealth.org/online_notification/notification/N19082117.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்