புதிய நம்பிக்கை!தருகின்றன மாநகராட்சி பள்ளிகள்...7,351 மாணவர்கள் புதிதாக சேர்ப்பு! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

புதிய நம்பிக்கை!தருகின்றன மாநகராட்சி பள்ளிகள்...7,351 மாணவர்கள் புதிதாக சேர்ப்பு!

புதிய நம்பிக்கை!தருகின்றன மாநகராட்சி பள்ளிகள்...7,351 மாணவர்கள் புதிதாக சேர்ப்பு! 


கோவை மாநகராட்சி பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், 7,351 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆசிரியர் - மாணவர் விகிதாசாரப்படி மாணவர் எண்ணிக்கையை காட்டிலும், ஆசிரியர்கள் அதிகமாக இருப்பதால், கற்பித்தலை மேம்படுத்த வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை மாநகராட்சி சார்பில், 42 துவக்கப்பள்ளி, 14 நடுநிலைப்பள்ளி, 12 உயர்நிலைப்பள்ளி, 16 மேல்நிலைப்பள்ளி, ஒரு காதுகேளாதோர் பள்ளி என, 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன.ஜூன் மாதம் கல்வியாண்டு துவங்கிய போதிலும், ஆக., 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப் பட்டது. ஜூன் 3ம் தேதி வகுப்பு துவங்கிய போது, மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை, 15 ஆயிரத்து, 011 ஆக இருந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் டி.சி., வாங்கிக் கொண்டு வெளியேறினர். புதிதாக, 7,351 மாணவ, மாணவியர் சேர்ந்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களோடு, மற்ற பள்ளி மாணவர்கள் சேர்த்து, 1,378 பேர், 'டி.சி.,' வாங்கி, வெளியேறியுள்ளனர்.மாணவர்கள் அதிகரிப்பு!தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 984 ஆக உள்ளது. துவக்கப்பள்ளிகளில், 2,113, நடுநிலைப்பள்ளிகளில், 919 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதேநேரம், துவக்கப்பள்ளிகளில், 505, நடுநிலைப்பள்ளிகளில், 388 மாணவர்கள் டி.சி., வாங்கிக் கொண்டு, வேறு பள்ளிகளுக்குச் சென்றுள்ளனர். ரத்தினபுரி பள்ளியில், 173 மாணவர்கள் புதிதாக சேர்ந்த போதிலும், 43 பேர் 'டிசி' பெற்றுள்ளனர்.இதற்கு முன், 25 ஆயிரம் மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளில் படித்தனர். தற்போது, 7,351 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்திருந்தாலும், கடந்த கல்வியாண்டுகளை ஒப்பிடுகையில், 5,000 மாணவர்கள் குறைவு. குறிப்பாக, திருச்சி ரோடு, பீளமேடு, தேவாங்கபேட்டை, கரும்புக்கடை, பனைமரத்துார் மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறது.கூடுதலாக 150 ஆசிரியர்கள்மாநகராட்சி பள்ளிகளில், 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு விதிமுறைப் படி, 30:1, 40:1 என்ற விகிதாச்சாரப்படி கணக்கிட்டால் கூட, 700 ஆசிரியர்கள் போதுமானது. 150 ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது.ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், சித்தாபுதுார் பள்ளிகள் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் கற்பித்தலில் சிறந்து விளங்குகின்றன. 
மற்ற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தில், பெரிய முன்னேற்றம் இருப்பதில்லை.மாணவர் எண்ணிக்கை குறைவு; ஆசிரியர்கள் அதிகம் என்பதால், இனியாவது கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்த, மாநகராட்சி கல்வி பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய மாணவர்கள்துவக்கப்பள்ளிகளில்... 2,113நடுநிலைப்பள்ளிகளில்... 919டி.சி.,வாங்கியவர்கள்துவக்கப்பள்ளிகளில்... 505நடுநிலைப்பள்ளிகளில்... 388

No comments:

Post a Comment

Please Comment