செப்.7ல் நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2.. உலகமே உற்று நோக்குகிறது - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, September 6, 2019

செப்.7ல் நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2.. உலகமே உற்று நோக்குகிறது

செப்.7ல் நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2.. உலகமே உற்று நோக்குகிறது சந்திரயான் 2 விண்கலம். நிலாவில் தரையிரங்கும் நிகழ்வு செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் நடைபெறுகிறது. இந்திய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக போற்றப்படும் இந்த அரிய நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கிறார்.  உலகில் எந்த நாடும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத பகுதி என்றால் அது நிலவின் தென்துருவப்பகுதி தான். இருள் சூழ்ந்த இந்த பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்தியா தான் முதல்முறையாக ஆராய்ச்சி செய்திட சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பி வைத்தது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் ரோவர் பிரக்யான் கூண்டுடன்(வீடு) நாளை நள்ளிரவு அதாவது சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. அதன்பிறகு லேண்டர் விக்ரமில் இருந்து ரோவர் பிரக்யான் தனித்து பிரிந்து செல்லும் நிகழ்வு அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் நடக்கும். இந்நிலையில் சந்திராயன் வெற்றிகரமாக தரையிரங்கிய உடன், நிலவை தொட்டு ஆராய்ச்சி செய்ய நாடுகள் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும். அதேபோல் நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைக்கும். நிலவின் தென்ருவ பகுதியில் சந்திரயான் 2 விண்கலத்தை தரையிறக்கும் பணி என்பது மிகவும் சவால் நிறைந்த பணியான கருதப்படுகிறது. இங்கு தரையிறங்கும் சந்திரயான் 2 முதல் முறையாக நிலவின் தென்துருவத்தை ஒளிவீசி வெளிச்சத்துடன் காட்டப்போகிறது.No comments:

Post a Comment

Please Comment