மிட்ரேஞ்ச் போனில் 5ஜி தொழில்நுட்பமா? அசத்தும் சாம்சங் நிறுவனம் - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Wednesday, September 4, 2019

மிட்ரேஞ்ச் போனில் 5ஜி தொழில்நுட்பமா? அசத்தும் சாம்சங் நிறுவனம்

மிட்ரேஞ்ச் போனில் 5ஜி தொழில்நுட்பமா? அசத்தும் சாம்சங் நிறுவனம் 


5G mid-range smartphone Samsung Galaxy A90 5G Specifications5ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் முதல் மிட்ரேஞ்ச் போனை அறிமுகம் செய்து வைக்க உள்ளது சாம்சங் நிறுவனம். சாம்சங் கேலக்ஸி ஏ90 என்ற மிட்ரேஞ்ச் பட்ஜெட் ஸ்மார்ட்போன் தற்போது 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஓப்போ மற்றும் சியோமி நிறுவனத்தின் வளர்ச்சியை பெரும் அளவில் கேள்விக்குட்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் வருகை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 5G mid-range smartphone Samsung Galaxy A90 5G Specifications 


 இந்த ஸ்மார்ட்போன் 855 ப்ரோசசரை பெற்றுள்ளது இதன் பேட்டரி 4500mAh சேமிப்புத் திறனை கொண்டுள்ளது 6.7 இன்ச் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் யூ-டைப் டிஸ்பிளேவுடன் வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் வடிவமைப்பில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன் இதன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இந்த ஸ்மார்ட்போனின் திரையில் பொருத்தப்பட்டுள்ளது. 


 மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கும் இந்த போனின் முதன்மை கேமரா செயல்திறன் 48 எம்.பி ஆகும். 5 எம்.பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்.பி. அல்ட்ரா-வைட் லென்ஸை கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 32 எம்.பி. செயல்திறனை கொண்டுள்ளது. தென் கொரியாவில் வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது. உலகளாவிய விற்பனை மிக விரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்