துளிர் திறனறிதல் தேர்வில் 5,000 பேரை பங்கேற்கச் செய்ய முடிவு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

துளிர் திறனறிதல் தேர்வில் 5,000 பேரை பங்கேற்கச் செய்ய முடிவு

துளிர் திறனறிதல் தேர்வில் 5,000 பேரை பங்கேற்கச் செய்ய முடிவு 




துளிர் திறனறிதல் தேர்வில் தஞ்சாவூர் மாவட்ட மாணவர்கள் 5,000 பேரை பங்கேற்க வைப்பது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டத்தில், மாணவர் பொது அறிவு திறனை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும், துளிர் திறனறிதல் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 5,000 மாணவர்களைப் பங்கேற்க வைப்பது, செப். 8-ம் தேதி கல்லணையில் நடைபெற உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற் குழுக் கூட்டத்தை தஞ்சை மாவட்டம் சார்பில் சிறப்பாக நடத்திக் கொடுப்பது, வியாழக்கிழமை (செப்.5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி கெளரவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 




மாவட்டத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் லெ. முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. ராம் மனோகர், பொருளாளர் ரமேஷ், மாநில நிர்வாகிகள் வெ. சுகுமாரன், ஸ்டீபன்நாதன், பாலகிருஷ்ணன், தியாகராஜன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Please Comment