`ஆசிரியர்களின் கண்டிப்பே எங்களை ஆளாக்கியது!' - 50 வருடங்களுக்கு முன் படித்த பள்ளியில் உருகிய எம்.பி - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, September 6, 2019

`ஆசிரியர்களின் கண்டிப்பே எங்களை ஆளாக்கியது!' - 50 வருடங்களுக்கு முன் படித்த பள்ளியில் உருகிய எம்.பி

`ஆசிரியர்களின் கண்டிப்பே எங்களை ஆளாக்கியது!' - 50 வருடங்களுக்கு முன் படித்த பள்ளியில் உருகிய எம்.பி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று விழாக்கோலம் பூண்டது. அந்த வகையில், திருச்சி சிவா எம்.பி, தான் 50 வருடங்களுக்கு முன்பு படித்த பள்ளிக்குச் சென்று அங்கு பணியாற்றிய ஆசிரியர்களைப் பாராட்டியதுடன், மாணவர்களிடம் கலந்துரையாடியானர். திருச்சி சிவா திருச்சி சிவா, தான் படித்த பள்ளி மற்றும் கல்லூரியில் அவ்வப்போது நேரில் சென்று விழாக்கள் நடத்துவது, மரம் நடுவது, பழைய ஆசியர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து விழாக்கள் நடத்திப் பரிசளிப்பது போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவது வழக்கம். 


அந்த வகையில் இன்று, அவர் படித்த திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இ.ஆர்.மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்துக் கௌரவித்தார். தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அவர்,``திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றிய இந்தப் பள்ளியில்தான் நானும் படித்தேன். பள்ளிக்குள் நுழையும்போது மாணவர் பருவமும், எனது பால்ய நண்பர்களுடனான நினைவுகளும் வந்துபோகின்றன. இன்றோடு நான் பள்ளிப் படிப்பை முடித்து 50 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. அந்த வசந்தகாலம் என்வாழ்வில் வராதா என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கிறது. அன்று ஆசிரியர்கள் எங்களை அடித்தார்கள். அதனால் மாணவர்களாகிய நாங்கள், ஆங்கிலம் கற்றுக்கொண்டோம். அவர்களைக் கண்டு நாங்கள் அஞ்சி நடுங்கியதால், எங்களது வாழ்க்கை நெறிப்பட்டது. ஆசிரியர்களுடன் திருச்சி சிவா இன்று, அவற்றை நம்மால் உணர முடிகிறது. பாடம் நடத்திய ஆசிரியர்களை எந்நாளும் நினைவில் வைத்திருக்கிறோம். வாழ்வில் இந்த உயரத்தை அடைந்ததற்கு ஆசிரிய பெருமக்கள் தான் காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்" என்று உருக்கமாகப் பேசி மாணவர்களின் கரவொலியை அள்ளினார். தொடர்ந்து அவர் மாணவர்கள், ஆசிரியர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கி, சால்வைகள் அணிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment