மாதச் சம்பளதாரர்களின் குடும்ப பட்ஜெட்டுக்கு உதவும் '50%-20%-30%' உத்தி! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Tuesday, September 3, 2019

மாதச் சம்பளதாரர்களின் குடும்ப பட்ஜெட்டுக்கு உதவும் '50%-20%-30%' உத்தி!

மாதச் சம்பளதாரர்களின் குடும்ப பட்ஜெட்டுக்கு உதவும் '50%-20%-30%' உத்தி! பன்னாட்டு நிறுவனங்களில் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசியில் நண்பர்களிடம் நிதியுதவி கேட்கும் நிலையில் பலரும் இருக்கிறார்கள். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நினைத்ததெல்லாம் வாங்குகிறார்கள். மாதச் சம்பளம் வாங்கியதும் அதில் பெரும்பகுதி மாதத்தவணைக்கே போய்விடுகிறது. 
 அதன்பின், அன்றாடச் செலவுகளுக்குப் பற்றாக்குறை ஏற்படுவதால் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. இப்படியாக சிறுகச் சிறுக கடன் சேர்ந்து ஒருகட்டத்தில் பெரிய அளவில் கழுத்தை நெறிப்பது போலாகிறது. மாதச் சம்பளதாரர்கள் எப்படி பட்ஜெட் போட்டு செலவழிப்பது, வங்கிக் கடன்களை எப்படி நிர்வகிப்பது என நிதி ஆலோசகர் என்.விஜயகுமாரிடம் கேட்டோம். 

 ஒரு வாகனம் வைத்திருப்பது தேவை என்றால், இன்னொரு வாகனம் வாங்குவது விருப்பம் என்ற வகையில் வரும் 50% : 20% : 30% "மாதாந்தரச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது வருமானத்தைத் திட்டமிட்டு நிர்வகிக்க 50% : 20% : 30% என்ற பட்ஜெட் முறையைப் பின்பற்ற வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், ஒருவருடைய வருமானத்தில் 50% தொகையை மட்டுமே வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட மாதாந்தரத் தவணைகளுக்குச் செலவழிக்க வேண்டும். 20% சேமிப்பாக இருக்க வேண்டும். 


இந்தச் சேமிப்பில் முதலீடுகளும் அடக்கம். 30% குடும்பத்துக்கான அன்றாடச் செலவுகளுக்கானது. இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் வருமானத்தைப் பகிர்ந்து செலவுசெய்தால், உங்களுக்கு நிதித் தட்டுப்பாடே இருக்காது. தேவை Vs விருப்பம் அடுத்ததாக, தேவை என்பதற்கும் விருப்பம் என்பதற்குமான வித்தியாசம் தெரிய வேண்டும். தேவை என்பதில் உணவு, உடை, வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள், போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை அடங்கும். விருப்பம் என்பது தேவையைத் தாண்டி வாங்கக் கூடியவை. home budget உதாரணமாக, ஒரு வாகனம் வைத்திருப்பது தேவை என்றால், இன்னொரு வாகனம் வாங்குவது விருப்பம் என்ற வகையில் வரும். வசிப்பதற்கு ஒரு வீடு இருப்பது தேவை. இன்னொரு வீடு வாங்குவது விருப்பம். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டாலே நமது மாதாந்தர பட்ஜெட்டைச் சிறப்பாக வகுக்கலாம். 
 - இத்துடன், மாதத் தவணையை நிர்வகித்தல், ஆறு மடங்கு வைப்பு நிதி முறை, வட்டி விகிதத்தைச் சரிபார்த்தல் முதலானவற்றையும் அறிந்து நிதித் திட்டமிடலில் அசத்துவதற்கு உதவும் நாணயம் விகடன் இதழின் கைடன்ஸ் கட்டுரையை வாசிக்க > உங்கள் கனவுகளை நிறைவேற்றும் குடும்ப பட்ஜெட்! https://www.vikatan.com/news/investment/financial-planning-family-budget-to-fulfill-your-dreamsNo comments:

Post a Comment

Please Comment