இன்றைய செய்திகள் 3.09.19(செவ்வாய்க்கிழமை) - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இன்றைய செய்திகள் 3.09.19(செவ்வாய்க்கிழமை)

இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் குளறுபடி மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதிலும் பழிவாங்கும் நடவடிக்கையினை விரைவில் கலைந்து தீர்வுகாணப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


⛑⛑கீழடி 5ஆம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் - தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தகவல். 


⛑⛑பல்வேறு மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் ஆணை குளறுபடியால் நிறுத்தி வைத்தது  கல்வித்துறை - நாளிதழ் செய்தி. 


⛑⛑வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி : கைரேகை ஸ்கேனரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் .

⛑⛑தனியார் பள்ளி மாணவர்களே விரும்பி சேரும் வகையில், கல்வி, ஒழுக்கம், சுகாதாரத்தில்  அசத்துகிறது புழல் ஒன்றிய விளாங்காடு பாக்கம் ஊராட்சி  தர்காஸ் அரசு ஆரம்பப் பள்ளி - நாளிதழ் செய்தி

⛑⛑TET தேர்வு  தோல்வி எதிரொலி :ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை கண்காணித்து அறிக்கை தர உத்தரவு

 ⛑⛑குரூப் - 4' தேர்வில் பிழைகள்: விசாரிக்க குழு

⛑⛑வனக்காவலர் பணி தேர்வு தேதி மாற்றம்

⛑⛑JEE நுழைவு தேர்வு பதிவு தேதி மாற்றம்

⛑⛑ஆதார் வழி பண பரிவர்த்தனை முறை தொடங்கியது.

⛑⛑தனித்திறன்களை வளர்க்கும் பின்லாந்து கல்வி முறை: தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பரிசீலனை

⛑⛑ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க ஒன்றியம் ஒதுக்கீடு

⛑⛑அரசு மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.கள் இனி பிரின்ஸிபால்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு

⛑⛑இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் குளறுபடி மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதிலும் பழிவாங்கும் நடவடிக்கையினை விரைவில் கலைந்து தீர்வுகாணப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

⛑⛑மத்திய அமைச்சகத்தின் விவசாய துறையில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

⛑⛑நீட் தேர்வை ரத்து செய்திட கோரியும்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரியும்
நீட் தேர்வினால் பலியான சகோதரி அனிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு தினமான நேற்று மாநிலத்தின் தலைநகர் சென்னையில் ஆயிரம் அனிதாக்களாக மாநிலம் முழுவதிலும் இருந்து மாணவிகள் பங்கேற்ற மாபெரும் பேரணி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்றது

⛑⛑ஆசிரியர் தினத்தை"முன்னிட்டு நடைபெற்ற கனவு ஆசிரியர்களின் கூடல் விழாவில் தான் இந்த நிலைக்கு உயர காரணமான தனது ஆசிரியரை மேடைக்கு அழைத்து வந்து, அவரது காலில் விழுந்து வணங்கிய கரூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு.அன்பழகன் அவர்கள்.

⛑⛑ 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை மொத்தம் 5.65 கோடி பேர் தாக்கல் - வருமான வரித் துறை அறிவிப்பு

⛑⛑ தமிழக அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகங்களில் மருந்து விநியோகிப்பாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியீடு

⛑⛑டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தவறான 4 கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி ஆலோசனை - டிஎன்பிஎஸ்சி

⛑⛑குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்;ஒரு பணிக்கு 209 பேர் போட்டி; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

⛑⛑ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

⛑⛑விபத்துகளினால் இறப்பு & பாதிப்பு அடையும் மாணவர்களின் குடும்பத்தின நிவாரண தொகை பெற 
 பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பம், மாணவர் விபர படிவம், தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம், எப்ஐஆர், இறப்பு சான்று, வாரிசு சான்று, மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை நகல், மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம், முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரை கடிதம் தேவை - பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை.

⛑⛑IAS, IPS உள்ளிட்ட சிவில் சர்விஸ் தேர்வுக்கான பயிற்சிகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசின் சார்பில் 33 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
⛑⛑தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில் செயல்படும்  ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளை நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த பிறகு, இவ்வாறு  ஒருங்கிணைந்த  900  மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, 'பள்ளி முதல்வர்' என, அழைக்கப்படுவர் - நாளிதழ் செய்தி
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டார்:

🌹👉7 நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அங்கு கையாளப்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

👉அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.                                                                👉அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப்ரதீப் யாதவ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சரையும் சந்தித்து, அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் அந்நாட்டிற்கான இந்திய தூதர் வாணி ராவ், உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏            என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment