வரலாறு படைத்தது தங்கம்! சென்னையில் ரூபாய் 30000த்தை கடந்தது! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

வரலாறு படைத்தது தங்கம்! சென்னையில் ரூபாய் 30000த்தை கடந்தது!

வரலாறு படைத்தது தங்கம்! சென்னையில் ரூபாய் 30000த்தை கடந்தது! மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு பின்னான நாட்களில், ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிரடியாக ஏற்றம் காண்பதும், சில நாட்களில் குறைவான அளவில் குறைவதாகவும் இருந்து வருகிறது. ஏற்றம் காணும் போது கிராமுக்கு 100 ரூபாய் என்றால், குறையும் போது சவரனுக்கு 100 ரூபாய் குறைகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை ஏற்றம் கண்டது. நேற்று ( செப்டம்பர் 3 ) காலை சவரனுக்கு 126 ரூபாய் வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,718 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,744 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,875 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.31,000 எனவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று மாலை ( செப்டம்பர் 3 ) மீண்டும் ஏற்றம் கண்டு, சவரனுக்கு 88 ரூபாய் வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,729 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,832 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,886 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.31,088 விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ( செப்டம்பர் 4 ) தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத விலையான ரூபாய் 30000த்தை ஒரு சவரன் கடத்துள்ளது. சவரனுக்கு 288 ரூபாய் வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,765 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3922 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.31,376 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment