தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள்-2019 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, September 2, 2019

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள்-2019

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள்-2019 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த ஆண்டுக்கான போட்டிகளுக்கு தலைப்புகள் பின்வருமாறு..  5-8 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வும் நானும்.. என்ற தலைப்பிலும் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் வகுப்பறை.. என்ற தலைப்பிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது.. என்ற தலைப்பிலும் ஆர்வலர்களுக்கு அரசுப்பள்ளிகள் இணைப்பும் அடைப்பும் என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும்.. கல்லூரி மாணவர்களுக்கு நின்னா தேர்வு.. நடந்தா தேர்வு.. என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறும்.. கல்வி என்ற பொதுத் தலைப்பில் நடைபெறும் சிறுகதைப் பிரிவில் அனைவரது படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.. போட்டி விதிமுறைகள்..: 
ஏ 4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும். கவிதை இருபது வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.. சிறுகதை 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.. ஒருவர் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்ப வேண்டும். சொந்த படைப்பாகவும் புதியதாகவும் இருக்க வேண்டும். படைப்புகளை எழுதி தபாலில் அனுப்பலாம்.. அல்லது தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கலாம்.. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் மாவட்ட, மாநில அளவுகளில் மூன்று பரிசுகள் வழங்கப்படும்… பரிசு பெற்ற படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுவிழுது: இருமாத கல்வி இதழில் வெளியிடப்படும்.. படைப்புகளை செப்., 15 க்குள் மாநில ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு அனுப்ப வேண்டும். படைப்புகள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் தின போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.. நேரடியாக மாநில ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் நிராகரிக்கப்படும்.. போட்டி முடிவுகள் செப்.30 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க இணையதளமான www.tnsf.co.in -ல் வெளியிடப்படும்.. 


மேலும் விபரங்களுக்கு: ச.தீனதயாளன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள்-2019, கதவு எண் 1, பள்ளிக்கூட சாலை, முகையூர் & அஞ்சல், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்-603305, செல்: 9444869679, மின்னஞ்சல்: tnsf.kalvikulu@gmail.com

No comments:

Post a Comment

Please Comment