இன்றைய செய்திகள் 20/09/2019 கல்விசெய்திகள் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, September 20, 2019

இன்றைய செய்திகள் 20/09/2019 கல்விசெய்திகள்

இன்றைய செய்திகள் 
20.09.19(வெள்ளிக்கிழமை)🙏🙏🙏🙏🙏,                              .
🎀🎀மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம்

👉முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம்

👉தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் பள்ளிக்கல்வித்துறறை                       

      🎀🎀தமிழ்நாடு பள்ளிகல்விப் பணி இயக்குனர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை எண் : 201 தேதி : 19.09.2019

🎀🎀தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை முதலமைச்சர் ஒப்புதலுடன் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

🎀🎀பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த SMC கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு🎀🎀மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட வேலைகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🎀🎀உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அலுவலர்களை நியமிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

🎀🎀நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருக்கு மாற்றாக தேர்வு எழுதிய நபர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
🎀🎀விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

🎀🎀இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.

🎀🎀ஹிந்தி மொழி தொடர்பான தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
🎀🎀நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

🎀🎀சென்னை தலைமைச் செயலகத்தில் பயோ-​மெட்ரிக்‍ வருகைப்​பதிவு முறை அமல்படுத்தப்படுவதற்கு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நேரம் காலம் பார்க்‍காமல் பணியாற்றும் தங்களை இந்த முறைக்‍கு உட்படுத்தக்‍கூடாது என்று தலைமைச் செயலக ஊழியர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
🎀🎀தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

🎀🎀நிலவை ஆய்வுசெய்ய சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்றுடன் முடிகிறது

இஸ்ரோ, நாசா விஞ்ஞானிகள் முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை

🎀🎀அக்டோபர் 2 முதல் நெகிழிக்குத் தடை: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்
🎀🎀மாணவர்களை சுகாதார துாதுவராக நியமித்து, பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி தலைமை ஆசிரியருக்கு சுகாதாரதுறை அறிவுறுத்துதல்

🎀🎀அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இனி கிராமங்களுக்கு சென்று அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ், அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்த வேண்டும் மற்றும் இதற்காக அவர்கள் ஊராட்சியில் உள்ள  புறம்போக்கு இடங்களை அறிந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

🎀🎀இடைநிலை ஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை விதித்துள்ளது. - நாளிதழ் செய்தி 

🎀🎀அரசு பணியில் சேருவதற்கு முன்னர் உயர்கல்வி பயின்றமைக்கு துறை முன் அனுமதி பெற வேண்டுமா ? என்ற முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு தொலைதூர வழியில் பயின்று இருந்தால் அனுமதி தேவையில்லை.ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு உயர்கல்வி தொடர்ந்து பயின்று முடிக்க வேண்டிய சூழலில் தகுந்த அலுவலரிடம் தொடர்ந்து பயில அனுமதி பெற வேண்டும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

🎀🎀அரசுப் பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது - நாளிதழ் செய்தி 

🎀🎀தேர்வுகளின் வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

🎀🎀அக்டோபர் முதல் நடுநிலைப் பள்ளிகளில் மின்னணு கைரேகை பதிவு நடைமுறை - நாளிதழ் செய்தி

🎀🎀25.09.2019 முதல் 02.09.2019 வரை மாநில அளவிலான கைவினை கலை பயிற்சி - ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவர்களை காலாண்டு விடுமுறையில் சேர்க்க ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உத்தரவு

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment