ரூ.153 கட்டணத்தில் 200 சேனல்கள்: அரசு கேபிள் டிவி அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ரூ.153 கட்டணத்தில் 200 சேனல்கள்: அரசு கேபிள் டிவி அறிவிப்பு

ரூ.153 கட்டணத்தில் 200 சேனல்கள்: அரசு கேபிள் டிவி அறிவிப்பு 

தமிழகத்தில் ரூ.153 கட்டணத்தில் 60 கட்டணச் சேனல்கள் உள்பட 200 சேனல்கள் வழங்கப்படுவதாக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மூலமாக ரூ.153 (ரூ.130 மாதக் கட்டணம், 23 ஜி.எஸ்.டி. வரி) மாதக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பானது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் கட்டணத்தில் 200 சேனல்கள் அளிக்கப்படுகின்றன. அதில், 60 கட்டணச் சேனல்கள் அடங்கும். பொது மக்கள் அதிகம் விரும்பும் சேனல்களாக விஜய் டிவி, சன் டிவி, கே டிவி, ஆதித்யா டிவி, சுட்டி டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ், மெகா டிவி, டிஸ்கவரி தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், மூவிஸ் நவ் போன்ற சேனல்களும் வழங்கப்படுகின்றன. ஆபரேட்டர்கள் அணுகலாம்: ரூ.153 கட்டணத்தில் 200 சேனல்களைப் பார்க்கும் புதிய திட்டத்தைப் பெறுவதற்கு பொதுமக்கள் தங்களது பகுதி உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களை அணுகலாம். மேலும், கேபிள் தொலைக்காட்சிக்கான செட்-டாப் பாக்ஸ் முற்றிலும் விலையின்றி வழங்கப்படுகிறது என்று அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment