மொழிபெயர்ப்பில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மானியம்: செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மொழிபெயர்ப்பில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மானியம்: செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

மொழிபெயர்ப்பில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மானியம்: செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகள் மத்திய அரசின் மானியத்தைப் பெற செப்டம்பர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டம் தொடர்பான துறைகளில் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளுக்கு மானியம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, மூலமுதலான சட்டப் புத்தகங்கள், தரமான சட்டப் புத்தகங்கள், செம்மொழி இலக்கியங்கள், சட்ட சொல்லகராதிகள், சட்டப் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றை மொழிபெயர்ப்பு செய்தல் மற்றும் வெளியிடுவோர் மானியத்துக்கு அனுப்குமார் வர்ஷ்னே, இணைச் செயலர், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சட்டம் இயற்றும் துறை, ஆட்சிமொழிப் பிரிவு, அறை எண் 725, 7-ஆவது தளம், ஏ பகுதி, சாஸ்திரிபவன், புதுதில்லி-01 என்ற முகவரிக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சேருமாறு அனுப்ப வேண்டும். www.lawmin.nic/olwing என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 011 23386229, 23387051 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment