காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 06-09-2019 - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Friday, September 6, 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 06-09-2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 06-09-2019இன்றைய திருக்குறள்

குறள் எண்-233

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் 
 பொன்றாது நிற்பதொன் றில்.

✍மு.வ உரை:

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

✍கருணாநிதி  உரை:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

✍ சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

✡✡✡✡✡✡✡✡

பொன்மொழி

நீங்கள் உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால் விரோதிகள் தோன்றுவது இயற்கையாக இருந்தாலும்,நாம் நமது வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.

   - அப்துல் கலாம்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Important  Words

 Sprain சுளுக்கு

 Sinus நீர்ச் சேர்க்கை

 Sleep தூக்கம்

 Insomnia தூக்கம் வராமை

 Sweat வியர்வை

♻♻♻♻♻♻♻♻

பழமொழி மற்றும் விளக்கம்

கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும் .

நாம் அறிந்த விளக்கம் :

கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமை மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.

✍✍✍✍✍✍✍✍

பொது அறிவு

1) எரிமலை இல்லாத கண்டம் எது?

ஆஸ்திரேலியா

2.) உலகில் இராணுவமே இல்லாத நாடு?

கோஸ்டாரிகா

📫📫📫📫📫📫📫📫

விடுகதை

1. கிட்ட இருக்கும்  பட்டணம். எட்டிப் பார்க்க முடியவில்லை. அது என்ன?

முதுகு

2.கீழேயும் மேலேயும் மண். நடுவில் அழகான பெண். அது என்ன?

மஞ்சள் செடி

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

இன்றைய கதை

இனிப்பைத் தின்ற எறும்பு

அவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான். 

இந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. 

மதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான். 

அந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்? என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர். 

குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார். 

அவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள். 

எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன். 

தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார். 

சதீஷ் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார். 

அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான். 

இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான். 

தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன். 

தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா? என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான். 

இதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான். 

தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான். 

நீதி :
பிறரை ஏமாற்றுதல் கூடாது. 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

T. தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

செய்திச் சுருக்கம்

🔮 தமிழக அரசு சார்பில் 377 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

🔮உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் வரிசைபட்டியலில் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.

🔮விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்.

🔮தமிழகம்தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் காமராஜ்.

🔮நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

🔮India extends $1 billion line of credit for development of Russia’s Far East.

🔮Narendra Modi to witness soft-landing on moon.

🔮83 Tejas LCA pricing issue resolved: Defence Ministry official.

🔮IIT Madras, BHU, DU among five institutions to get eminence status.

🔮Rahmat Shah becomes first Afghan player to score Test century.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்