TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு எழுதும் நண்பர்களே அவசியம் படியுங்கள் தேர்வுக்கான TIPS - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Saturday, August 31, 2019

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு எழுதும் நண்பர்களே அவசியம் படியுங்கள் தேர்வுக்கான TIPS

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு எழுதும் நண்பர்களே அவசியம் படியுங்கள் தேர்வுக்கான TIPS 


TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு நாளை மறுதினம் 1-ம்தேதி நடைபெறுகிறது. தேர்வுக்குத் தயார் செய்வதில் மிகவும் முக்கியமானது, உங்கள் மனதைத் தயார்செய்வதுதான். 


தேர்வு என்றவுடன் தோன்றும் பயத்தைக் கைவிட்டு, தன்னம்பிக்கையோடும் விருப்பத்துடனும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உங்கள் மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். ‘என்னால் சிறப்பாகப் படிக்க முடியும், அதை விட தேர்வினை மிகச் சிறப்பாக எழுத முடியும்’ என உங்களை நீங்கள் நம்புங்கள் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதைவிட, நீங்கள் உங்களைப் பற்றி என்ன எண்ணுகிர்கள் என்பதுதான் மிக முக்கியம். இன்னும் நன்றாக படித்திருக்கலாமோ என்ற கவலையோ பதட்டமோ அடையத் தேவையில்லை. 



இதுவரை படித்தவற்றை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்தினாலே போதும். தேர்ச்சி பெற அதிக வாய்ப்புகள் உண்டு. 



 அதிகாலையில் எழுந்து படியுங்கள் அது சிறந்த பலனைக் கொடுக்கும் படித்தவற்றைக் கண்களை மூடித் திரும்ப நினைவுகூர்வதும் எழுதிப் பார்ப்பதும் மறதியைத் தடுக்கும். 


 எந்தப் பாடங்கள் நன்றாக உங்களுக்கு மனதில் பதியுமோ அவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும். படித்து மனதில் நிற்காத பாடங்களை படிப்பதில் செலவிடும் நேரத்தை கைவிட்டு, எந்த பாடப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளதோ அதில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள் 



தேர்வுக்கு அனைத்துப் பாடங்களையும் ஒருமுறைக்கு இரு முறை படியுங்கள். புரியாத வார்த்தைகளின் கீழ் அடிக்கோடிட்டு, சிரமம் பார்க்காமல் அவற்றுக்குப் பொருள் எழுதிவையுங்கள். 



பொருள் உணர்ந்து படிப்பதால், நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் இனி புதிதாக படிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 


அதை செய்தால் குழப்பம்தான் ஏற்படும். ஏற்கனவே படித்தவற்றை மட்டும் திரும்ப திரும்ப படித்து பார்க்கவும் மிக முக்கியமாக டென்ஷனாக இருக்கவேண்டாம் . 



எவ்வளவுதான் படித்திருந்தாலும் பதட்டம் அடைந்தால், தெரிந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாது. 

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு எழுதும் நண்பர்களே அவசியம் படியுங்கள் தேர்வுக்கான TIPS 


வெற்றி உறுதி என்ற முழு நம்பிக்கையுடன் தேர்வுக்கு தயாராகுங்கள் இறுதியாக ஒன்றை நீங்கள் நினைத்துகொள்ளுங்கள் நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உங்கள் வாழ்கை முறை மாறவும், உங்கள் கஷ்டங்கள் தீரவும், உங்களை உதாசினப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்டவும் உங்களுக்கு கொடுக்கபட்டுள்ள வாய்ப்பு இது. என்பதை நினைவு கொள்ளுங்கள். 



 கடவுள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். நீங்கள் வெற்றி பெற துளிர்கல்வியின்  வாழ்த்துக்கள். இறைவன் நாடினால் வெற்றியுடன் சந்திப்போம்….நன்றி 

No comments:

Post a Comment

Please Comment