பள்ளி கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம்; மெட்ரிக் இயக்குனரானார் ராமேஸ்வர முருகன் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, July 4, 2019

பள்ளி கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம்; மெட்ரிக் இயக்குனரானார் ராமேஸ்வர முருகன்

பள்ளி கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம்; மெட்ரிக் இயக்குனரானார் ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன் பள்ளி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆசிரியர்கள் முதல், பள்ளி கல்வி இயக்குனர் வரை, மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், வரும், 8ம் தேதி நடக்க உள்ளது. இதற்கிடையில், தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தமிழக பாடநுால் கழகத்தின் இயக்குனர்களும், சமீபத்தில் மாற்றப்பட்டனர்.


இதைத் தொடர்ந்து, பள்ளி கல்வி துறையின் தலைமை பொறுப்பான, பள்ளி கல்வி இயக்குனரையும், தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், மெட்ரிக் பள்ளி இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.அவருக்கு பதில், மெட்ரிக் பள்ளி இயக்குனராக உள்ள, கண்ணப்பன், பள்ளி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.ராமேஸ்வர முருகன், 2018, ஜூன், 30ல், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, பள்ளி கல்வி இயக்குனராக பொறுப்பேற்றார். 


சரியாக ஓராண்டு முடிந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளார்.இன்று, பள்ளி கல்வி இயக்குனராக பொறுப்பேற்கும், கண்ணப்பன், 2018, ஜன.,1ல், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் பொறுப்பில் இருந்து, மெட்ரிக் இயக்குனராக மாற்றப்பட்டார். சரியாக, ஒன்றரை ஆண்டுகள் தாண்டிய நிலையில், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவர்கள் இருவரும், ஜெயலலிதா ஆட்சியிலும், கல்வித் துறையில் இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.

No comments:

Post a Comment

Please Comment