மானியம் இல்லாத சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு !! எவ்வளவு தெரியுமா ? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, July 1, 2019

மானியம் இல்லாத சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு !! எவ்வளவு தெரியுமா ?

மானியம் இல்லாத சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு !! எவ்வளவு தெரியுமா ?


பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தைப் பொறுத்து நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்ற இறங்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் னியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.100.50 ஆக எண்ணெய் நிறுவனம் குறைத்துள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.737.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் ரூ.637க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் . மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.494.35க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. 


நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது. டெல்லியில், ரூ.737.50 ஆக இருந்த கியாஸ் விலை, ரூ.637 ஆக குறைந்தது. மானிய சமையல் கியாஸ் விலை, ரூ.497.37-ல் இருந்து ரூ.494.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஒவ்வொரு நகரங்களுக்கும் வேறுபடும்

No comments:

Post a Comment

Please Comment