பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, July 1, 2019

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல் 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தருமபுரியில் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.என்.வரதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியர்களுக்கு இணையாக மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு ஊதியத்தின் 21 மாதத்தின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் மருத்துவப்படி வழங்க வேண்டும். நிபந்தனைகள் இல்லாத முழுமையான மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் மு.காதர்மீரான், மாநிலத் துணைத் தலைவர்கள் கோ.சீதாராமன், ஆர்.ராகவன், தலைமை நிலையச் செயலர் வை.ஆறுமுகம், மாவட்ட செயலர் எம்.ரத்தினவேல், மாவட்டப் பொருளர் டி.வி.பாலாஜி, பிரசாரச் செயலர் வி.கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பி.சிவமாதையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Please Comment