வேலூர் உள்பட 4 இடங்களில் ஜூலை 6-இல் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்கள் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Wednesday, July 3, 2019

வேலூர் உள்பட 4 இடங்களில் ஜூலை 6-இல் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்கள்

வேலூர் உள்பட 4 இடங்களில் ஜூலை 6-இல் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்கள் 


சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பாக வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சிதம்பரம் ஆகிய 4 இடங்களில் வரும் 6-ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் முகாம்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் சிரமங்களைத் தவிர்த்து விண்ணப்பங்கள் அளிப்பதற்கும், சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்படுகின்றன. 


இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கு பெற அனைத்து விண்ணப்பதாரர்களும் www.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து ஏ.ஆர்.என். (விண்ணப்பப் பதிவு எண்-அதச) உருவாக்கி இணையதளத்தின் வழியே உரிய கட்டணத்தைச் செலுத்தி பின்னர் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாமில் பங்குபெறும் விண்ணப்பதாரர்கள் பார்வை நேரம் மற்றும் ஏ.ஆர்.என். விவரங்களை அச்சிட்ட வடிவத்தில் அந்தந்த அஞ்சலக பாஸ்போர்ட் மையத்துக்கு கொண்டு வர வேண்டும். 


தேவையான ஆவணங்களின் மூலங்களையும் சுயசான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும். புதிய மற்றும் மறுவெளியீட்டுக்கான வகையிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் ஜூலை 6- ஆம் தேதி நடைபெறும் இந்த முகாம்களுக்கான சந்திப்பு நேர ஒதுக்கீடு ஜூலை 3-ஆம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும். முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். 


நேர்காணலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட டோக்கன்கள் இந்த முகாமின் போது பரிசீலிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

Please Comment