மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்கத் தேவையில்லை? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Tuesday, June 18, 2019

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்கத் தேவையில்லை?

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்கத் தேவையில்லை? பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்பிலேயே அதற்கான பாடத்தை மட்டும் படிக்கும் வகையில் தேர்வு முறைகளில் நடப்பு ஆண்டு முதலே மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே, மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள்கள் இருந்த நிலையில், அது இனி ஒரே தாளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. 6 பாடங்கள் 5 ஆக குறைகின்றன. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வில் இனி உயிரியல் பாடம் படிக்கத் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் என்று 5 பாடங்கள் மட்டும் படித்தால் போதும். மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வில் கணிதம் படிக்கத் தேவையில்லை.
 தமிழ், ஆங்கிலம், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய 5 பாடங்கள் படித்தால் போதும். விரைவில் தேர்வு அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மாற்றம், நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.பின்னர் பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இது பரிசீலனையில் உள்ளது. பெற்றோர், மாணவர், ஆசியர்கள் கருத்துக்கேட்பு, முதல்வர் ஒப்புதலுக்கு பிறகு அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment