வினிகரை பயன்படுத்தி குளியலறையை சுத்தம் செய்வது எப்படி? - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, June 19, 2019

வினிகரை பயன்படுத்தி குளியலறையை சுத்தம் செய்வது எப்படி?

வினிகரை பயன்படுத்தி குளியலறையை சுத்தம் செய்வது எப்படி? வினிகரை சரியான முறையில் பயன்படுத்தும்போது, அது ஒரு பயனுள்ள, இயற்கையான சுத்தப்படுத்தும் பொருளாக பயன் தருகிறது. வினிகரை கொண்டு குளியலறையை எப்படி சுத்தம் செய்வது என்பது தொடர்பான முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம். நம் வீட்டை சுற்றி பல்வேறு விதங்களில் வடிகட்டிய (டிஸ்டில்ட்) வினிகரை பயன்படுத்தலாம். ஆனால், வினிகரை எப்போது பயன்படுத்துவது? வணிக ரீதியான சுத்தப்படுத்தும் பொருட்களை எப்போது பயன்படுத்துவது? என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? வினிகரில் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்றாலும், எல்லாவற்றுக்கும் அதை பயன்படுத்திவிட முடியாது. எனவே, குளியலறையை வினிகரை பயன்படுத்தி எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். 


குளிலயறையில் வினிகரின் பயன்கள் குறிப்பாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில், சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக இல்லாத, ரசாயனங்கள் கலந்த வணிக ரீதியான சுத்தப்படுத்தும் பொருட்களை பயன்படுத்த முடியாத சமயத்தில், நச்சு இல்லாத, இயற்கையான சுத்தப்படுத்தும் பொருளான வினிகர் சிறந்த தேர்வு, நல்ல பலனை அளிக்கக் கூடியது. வினிகர் இயற்கையான சுத்தப்படுத்தும் பொருளாக இருந்தாலும் கூட, அதை பயன்படுத்தி சுத்தப்படுத்தும் போது உங்களின் கைகளுக்கு உறை அணிந்து கொள்ள வேண்டும், அறைகளின் ஜன்னலை திறந்து காற்றோட்டமாக்க வேண்டும், ஏனெனில் அவை கடுமையான நெடியை கொண்டிருக்கும். வினிகரை பயன்படுத்தி உங்கள் குளியலறையை சுத்தப்படுத்தும் கலவையை தயாரிப்பதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த சில வழிமுறைகளை முயற்சித்து பாருங்கள்: 


குளியலறை டைல்ஸ்களை வினிகர் மூலம் சுத்தம் செய்வது எப்படி: 


சரிசம விகிதத்தில் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவை மற்றும் சுத்தமான மைக்ரோஃபைபர் துணியை எடுத்துக் கொண்டு, குளியலறை டைல்ஸ்களை சுத்தம் செய்யுங்கள். மேலும், குளியலறை மேடைகள் மற்றும் அலமாரி பெட்டிகளையும் கூட இக்கலவையைக் கொண்டு துடைக்கலாம். நீங்கள் முதல் முறையாக வினிகரை பயன்படுத்தி துடைப்பதாக இருந்தாலும் கூட, இதுவே சரியான வழிமுறையாகும். 


 குளியலறை துர்நாற்றங்களுக்காக வினிகரை எவ்வாறு பயன்படுத்துவது 


உங்கள் குளியலறையில் மோசமான துர்நாற்றம் வீசுகிறதா, அதை போக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியெனில், ஒரு கிண்ணத்தில் வடிகட்டப்படாத வினிகரை ஊற்றி, ஒருநாள் இரவு முழுவதும் குளியலறையில் வைத்து விடுங்கள். வினிகர் மூலம் நீங்களாகவே குளியலறை கிளீனரை தயாரியுங்கள் ஒவ்வொரு 3 கால்பங்கு தண்ணீரில் 8 அவுன்ஸ் வினிகரை கலந்து கொள்ளுங்கள். இந்த வினிகர் சொலிஷன் மூலம் வடிகாலலை சுற்றிய தரைப்பகுதிகளை சுத்தப்படுத்துங்கள்.பின்னர், 'மாப்' போட்டு துடைக்கும் போது, உங்களின் வேலை வெகு சீக்கிரத்திலேயே முடிந்து விடும்! நினைவில் கொள்ளுங்கள், மெழுகு அல்லாத தரைகளுக்கு மட்டுமே வினிகரை பயன்படுத்த வேண்டும். குளியலறை சுத்தம்: வினிகரின் பினிஷிங் டச் குழாய்களை சுற்றி சோப்பு அசுத்தங்கள், சுண்ணாம்பு கறை அதிகளவில் படிந்திருக்கும் பகுதியை வினிகர் மூலமாக சுத்தம் செய்வதன் மூலம், மிக சுத்தமாகிய மின்னும் குழாய்களை நீங்கள் பெற முடியும்! 4 பங்கு வினிகர், 1 பங்கு உப்பு கலந்த கலவையில் சிறு துணியை நனைத்து அதை, இந்த கடினமான கறை படிந்த இடங்களில் துடைத்து எளிதாக சுத்தப்படுத்திவிட முடியும். மேற்கூறிய உதாரணங்கள், எப்போது வெள்ளை வினிகர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், எப்போது கூடாது என்பதைப் பற்றி உங்களுக்கு சிறந்த ஒரு யோசனையை அளித்திருக்க வேண்டும். இப்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு உபயோகப் பொருட்களை சுகாதாரமாக எளிதாக பராமரிக்க, வினிகரை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிவீர்கள். கிளீன்ஐபீடியா பரிந்துரைகள்: வினிகர், பல்வேறு பலன்களை கொண்டது, ஆனாலும் எந்த தயாரிப்பும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. எனவே, தரை மேற்பரப்பில் மறைவான ஒரு இடத்தில் சிறிதளவு வினிகரை ஊற்றி சோதித்துப் பாருங்கள். அதன் மூலம் அதன் பயன்பாடு பாதுகாப்பானது தானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். பாதுகாப்பு எச்சரிக்கை: ப்ளீச்சுடன் வினிகரை ஒருபோதும் சேர்க்கக் கூடாது - 
சுத்தப்படுத்த வினிகரை பயன்படுத்தும் போது, இதை செய்யவே கூடாது. வினிகர் பல சூழ்நிலைகளில் சுத்தமான மேற்பரப்புகள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றை காப்பாற்றுவதற்கு உதவுகிறது, ஆனாலும், அதில் ப்ளீச் போன்ற அமிலத்தை சேர்க்கும் போது, குளோரின் வாயுவை விளைவிக்கும், இது நச்சுத் தன்மை வாய்ந்ததாகும். எனவே, வினிகரை தவிர்க்கும் பட்சத்தில், டோமெக்ஸ் போன்ற வணிக ரீதியான ப்ளீச்களை தனியாக பயன்படுத்துங்கள்!

No comments:

Post a Comment

Please Comment