மல்லிகை பூவிற்கு இப்படி ஒரு ரகசியமா?.! என்ன ஒரு அற்புதமான பயன்பாடு.!! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, June 13, 2019

மல்லிகை பூவிற்கு இப்படி ஒரு ரகசியமா?.! என்ன ஒரு அற்புதமான பயன்பாடு.!!

மல்லிகை பூவிற்கு இப்படி ஒரு ரகசியமா?.! என்ன ஒரு அற்புதமான பயன்பாடு.!!


மல்லிகை பூ. இந்த பூவை நமது தமிழ் பெண்கள் தலையில் வைத்து., அலங்காரமாக ஜோடித்து நடந்து வரும் போது பெண் தெய்வங்களே வந்தார் போல இருக்கும். கூந்தல் முழுவதும் மல்லிகை பூவை சூடி., நெற்றியில் திலகம் இட்டு., பாரம்பரிய ஆடையை பெண்கள் அணிந்து வருவதை காண பெண் தெய்வமே நேரில் வந்தார் போல இருக்கும். இந்த மல்லிகை பூவானது நல்ல நறுமணத்தையும்., மருத்துவத்திற்கும் அதிகளவில் பயன்படுகிறது. 


இந்த மல்லிகையானது இந்தியா., இலங்கை., தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் அதிகளவு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.இந்த மல்லிகையானது மதுரையில் இருந்து அதிகளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 


அதிகளவில் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகையின் விளைச்சல் அதிகளவில் உள்ளதால்., மதுரையை மல்லி நகரம் என்று அழைப்பார்கள். இந்த மல்லிகை பூவானது பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய மலராகவும்., சிரிய நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரில் அந்நகரின் குறியீடாகவும் உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மை பகுதிகளில் பயிரிடப்படும் மல்லிகை பூவானது., கர்நாடக மாநிலத்தில் உள்ள பங்களா என்னும் பகுதியில் இருந்து அதிகளவில் மதுரையை போன்றே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மல்லிகை பூவினை போன்றே மல்லிகை செடியின் வேரும் மருத்துவ குணத்தை தன்னுள் கொண்டுள்ளது. மல்லிகை பூவினை நிழல் உள்ள பகுதியில் உலரவிட்டு பொடியாக அரைத்து தேநீர் போன்று காய்ச்சி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனை சரியாகும்.குறித்த நேரத்தில் உணவுகளை உண்ணாமல் இருத்தல் மற்றும் சத்தான உணவு வகைகளை உட்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி பிரச்னையில் இருந்து விடுபடுவதற்கு மல்லிகை பூவின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையானது குணமாகும். 


இதுமட்டுமல்லாது கண்களில் சதை வளரும் பிரச்சனைக்கு மல்லிகை பூவின் பொடியுடன் பனங்கற்கன்று சேர்ந்து காய்ச்சி குடிக்க வேண்டும். அதிகளவு தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு மல்லிகை பூவை நன்றாக கையில் வைத்து கசக்கி அதில் இருந்து கிடைக்கும் நீரை நெற்றியில் தடவி வந்தால் தலைவலி பிரச்சனையானது குறைகிறது. மல்லிகை பூ செடியின் வேரை காயவைத்து பொடியாக மாற்றி வசம்பு தூளுடன் எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். மல்லிகை பூவினை வாங்கி நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால்., நமது வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொக்கி புழு மற்றும் நாடாப்புழு போன்றவை நீங்கி., நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இரண்டு அல்லது மூன்று மல்லிகை பூவை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெண்கள் மல்லிகை பூவினை தலையில் சூடுவது அவர்களின் அழகை அதிகரிக்க மட்டுமல்லாது மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும்., உடல் சூட்டினை குறைப்பதற்கும் தான். இந்த விஷயத்தை அன்றே அறிந்த தமிழன்., நமது பெண் பிள்ளைகளுக்கு மல்லிகை பூவினை சூடி அழகு நிறைந்த ஆரோக்கியத்தை பார்த்துள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment