'அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருந்தேன்'...பாடகர் எஸ்.பி.பி. பகீர் தகவல்... - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Tuesday, June 18, 2019

'அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருந்தேன்'...பாடகர் எஸ்.பி.பி. பகீர் தகவல்...

'அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருந்தேன்'...பாடகர் எஸ்.பி.பி. பகீர் தகவல்... 'சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் கோரதாண்டவம் ஆடுகிறது. 


நான் இந்த நிகழ்ச்சிக்கு கிளம்புவதற்கு முன் அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருந்தேன். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும் எனவே தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள்'என்று 'கூர்கா'பட ஆடியோ வெளியீட்டில் சமூக அக்கறையுடன் பேசினார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் 'கூர்கா'படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இது போன்ற நிகழ்ச்சிகளில் தலைகாட்டாத எஸ்.பி.பி நேற்றைய தனது உரையில் படக்குழுவினருக்கு கொஞ்சமாய் வாழ்த்துச் சொல்லிவிட்டு சென்னையின் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,'நாம் குரங்குகளிலிருந்து வந்தவர்கள். குரங்கள் தங்கள் கடமையை எப்போதும் போல் செய்துவரும் நிலையில் நாம் தான் தண்ணீரைச் சேமிப்பது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாமல் இன்று இந்த நிலைக்கு வந்துவிட்டோம். இன்று காலை நான் இந்நிகழ்ச்சிக்கு கிளம்புவதற்கு முன் குளிப்பதற்கு அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணி நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.இந்த நிகழ்ச்சியில கூட எல்லாருக்கும் தண்ணீர் பாட்டில் குடுத்திருக்காங்க. யாரும் அதுல ஒரு சொட்டு கூட வீணாக்காதீங்க. இன்னைக்கு தங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணிதான் காஸ்ட்லியானது. இனியாவது தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்க. வீட்ல ப்ளேட்ல சாப்பிடுறதுக்கு[ப் பதில் இலையில சாப்பிடுங்க. 


தினம் ஒரு துணி உடுத்தாம வாரத்துக்கு ரெண்டு ட்ரெஸ்ஸை பயன்படுத்துங்க. துணி துவைக்கிற தண்ணி செலவு மிச்சமாகும். அடுத்த தலை முறைக்கு நாம சேமிச்சிக் கொடுக்கவேண்டிய முக்கியமான சொத்துன்னா அது தண்ணிதான். இனிமேலாவது தண்ணீரை சேமிக்க ஆரம்பிங்க' என்று பேசினார் எஸ்.பி.பி.

No comments:

Post a Comment

Please Comment