கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Friday, June 21, 2019

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, மேலாண்மை நிலைய முதல்வர் ஆ. கெளரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில் நுட்பங்களும் குறித்த மூன்று சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் அல்லது பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கான நேரடி சேர்க்கை ஜூன் 14 முதல் நடைபெற்று வருகிறது. 1.6.2019 இல் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி காலம் 36 வாரங்கள் ஆகும். அரசு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படும். கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள், வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறலாம். கணினி பயிற்சி முடித்தவர்கள் சுய தொழில் செய்யவும், கணினி கல்வி மையங்கள், மருந்தகங்கள், ஹோட்டல்கள், வணிக வங்கிகள், அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் கணினி வேலை செய்யவும், கூடுதல் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பு உள்ளது. 
நகை மதிப்பீட்டு பயிற்சியை முடித்தவர்கள் வங்கி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெறலாம். இதற்காக, அனுபவம் மிகுந்த விரிவுரையாளர்களைக் கொண்டு, பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்று, பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.  கூடுதல் விவரங்களுக்கு, திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் அணுகியோ அல்லது 04366-227233, 9994647631 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment

Please Comment