👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here
🛑டாக்டர், இன்ஜினியர் என இரண்டையும் ஒரு கை பார்த்த மாணவி.. ஆனால் இந்தியா வேண்டாம் என சென்றார்
🛑மருத்துவ நுழைவுத் தேர்வு போட்டிகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி எனும் பெயரை குஜராத் மாணவி பெற்றுள்ளார்.
பொதுவாக மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்கள் ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வை மையமாக வைத்து படித்து வெற்றி பெறுவார்கள். ஆனால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஸ்துதி கந்த்வாலா ராஜஸ்தான் கோட்டாவில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
🛑தற்போது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி பெற்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இவரது பெற்றோர்கள் இருவரும் டாக்டர்கள். தந்தை சூரத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். தாய் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ நுழைவுத்தேர்வு போட்டிகளான எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வு தேசிய அளவிலும் 10வது இடத்தை பிடித்துள்ளார்.
🛑மற்றொரு தேர்வான நீட் தேர்வில் தேசிய அளவில் 27 வது இடம் பிடித்துள்ளார். இதெல்லாம் ஒருபுறமிருக்க ஜே இ இ எனப்படும் இன்ஜினியர் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் ஆயிரத்து 1086வது இடம் பிடித்துள்ளார்.
இவர் ஒரே நேரத்தில் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் வெற்றியை பற்றி கேட்டபோது படிப்பை என்றுமே நான் பாரமாக நினைத்து இல்லை.
🛑அதுவே என் வெற்றி எனக் கூறியுள்ளார்.
தேசிய அளவில் இடம் பிடித்த அந்த மாணவி தற்போது அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற எம் ஐ டி எனப்படும் தொழில்நுட்ப மையத்தில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த ஆராய்ச்சி படிப்பை படிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .