👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here
வாழ்த்து தெரிவித்த சென்னை மாணவர்: நன்றிக் கடிதம் எழுதிய பிரதமர்
தான் பிரதமராகப் பதவி ஏற்றதற்கு வாழ்த்து கூறிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு நன்றி தெரிவித்து நீண்ட கடிதத்தை பிரதமர் மோடி எழுதியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் ராஜ்குமார். பெரம்பூரை அடுத்த அகரத்தில் வசிக்கிறார். இவரது மகன் பிரனவ் (10) கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார்.
சமீபத்தில் மக்களவைத் தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
பிரதமராக இரண்டாம் முறையும் மோடி பதவி ஏற்றார். இதற்கு வாழ்த்து கூறி பிரனவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார். இதைப் பார்த்த மாணவர் பிரனவ், மகிழ்ச்சியில் உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்களிடம் காட்டி சந்தோஷப்பட்டார்.
பிரதமர் மோடி மாணவருக்கு எழுதியுள்ள நன்றிக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"பிரனவ் ராஜ்குமார்...2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வரலாற்று வெற்றி பெற்றதற்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தத் தீர்ப்பின் மூலம் 130 கோடி மக்களும் சிறந்த நிர்வாகம், வளர்ச்சி அரசியல் ஆகியவை மீது வலுவான நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் வலிமையான, நிலையான அரசுக்கு வாக்களித்துள்ளனர்.
மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக, கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நவீன காலத்துக்கு தகுந்த புத்தாக்கமான, முடிவுகளை எடுத்துள்ளோம்.
சரியான முயற்சி மற்றும் தீரமானத்துடன் கூடிய பிரம்மாண்டமான 5 ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் சாத்தியமில்லாததைச் சாத்தியமாக்கமுடியும் என்பதை உணர்த்தி இருக்கிறது. இன்னும் அதிகமான நல்ல விஷயங்கள் தெரிந்தால் நீங்கள் மகிழச்சி அடைவீர்கள்.
2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்க விரும்புகிறோம். இந்தியாவை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதாரமாக மாற்ற இருக்கிறோம்.
இளைஞர்களின் அளப்பரிய சக்தியால் இந்தியாவை உலகிலேயே உற்பத்திக்கு உரிய மிகப்பெரிய இடமாக மாற்ற இருக்கிறோம்.
நாங்கள் வளர்ச்சியை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்வோம். முறபோக்கான வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவை மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ,ஆக்கப்பூர்வமான வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்''. நரேந்திரமோடி
இவ்வாறு பிரதமர் மோடி எழுதிய நன்றிக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .