அம்மா இருசக்கர வாகனம் பெற ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, June 20, 2019

அம்மா இருசக்கர வாகனம் பெற ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அம்மா இருசக்கர வாகனம் பெற ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் திருவள்ளூா் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் பணிக்குச் செல்லும் மகளிா்கள் பயன்பெறும் நோக்கத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற வரும் ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சுய தொழில் செய்யும் மகளிா்களுக்கு பணிபுரியும் இடங்களுக்கு எளிதில் செல்லவும் பல்வேறு பணிகளை விரைந்து செய்யவும் ஏதுவாக உதவும் வகையில் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 தற்போது, திருவள்ளுா் மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டில் பணிக்கும் செல்லும் மகளிா்கள் மற்றும் பெண் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் வரும் ஜூலை-4 ஆம் தேதிக்குள் உள்ளூா் சேவை மையங்கள் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூா் மாவட்டத்தைச் சோந்தவா்கள் அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ஆகியோரை அணுகி அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் குறித்து விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா். அம்மா இருசக்கர வாகனம் பெற ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment

Please Comment