டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: மனிதநேயம் அறக்கட்டளை இலவச பயிற்சி வகுப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: மனிதநேயம் அறக்கட்டளை இலவச பயிற்சி வகுப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: மனிதநேயம் அறக்கட்டளை இலவச பயிற்சி வகுப்பு 


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2005-ம் ஆண்டு மனிதநேயம் அறக்கட்டளை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  கடந்த 14 ஆண்டுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 குரூப் 2, போன்ற பதவிகளுக்கும் சிவில் நீதிபதி பதவிகளுக்கும் இதுவரை 3366 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா கல்வியகம் திறம்பட பயிற்சி அளிக்க உள்ளது.  தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் அனைவரும் கட்டணமில்லா பயிற்சி பெற www.mntfreeias.com என்ற மனித நேய இணையதளத்தில் பதிவு செய்து Register for TNPSC Gr.IV Exam 2019 என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவ்வாறு மனிதநேய அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment