ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றிதழை ஜூன் 30க்குள் வழங்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Monday, June 17, 2019

ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றிதழை ஜூன் 30க்குள் வழங்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாடு அரசின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கு, குடும்ப ஓய்வூதியர்களுக்கு இந்த ஆண்டிற்கான நேர்காணல் 01.04.2019 முதல் தொடங்கப்பட்டு தற்போது அனைத்து மாவட்ட கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. 


எனவே, இதுநாள் வரை நேர்காணலுக்கு வராதவர்கள், வாழ்வு சான்றினை சமர்ப்பிக்காதவர்கள் நேரில் சென்றோ அல்லது ஜீவன் பிரமான் என்ற இணையதள வழி சேவை (WWW.Jeevanpramaan.gov.in) மூலமாகவோ தங்களது வாழ்வு சான்றினை இந்த மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலங்கள் அல்லது சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment